நடவடிக்கை எடுக்க கோரியும் கடலோர காவல் நிலையத்தை மாபெரும் முற்றுகை போராட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இராமநாதபுரம் (தெற்கு) மாவட்ட தலைமையின் சார்பாக பெரியபட்டிணம் சகோ.அப்துல் வாஹித் அவர்களை 18.04.2017 அன்று வனத்துறை அதிகாரிகளால் கொலைவெறி தாக்குதல் நடத்தி கடலில் வீசி சென்ற வனதுறை அதிகாரி ரேஞ்சர் சதீஸ் மீது தமிழக அரசை நடவடிக்கை எடுக்க கோரியும், அவரை தகுந்த நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தும் கடலோர காவல் ஆய்வாளர் ரமேஸ் மீதும் தமிழக அரசை துறைரீதியான நடவடிக்கை எடுக்க கோரியும் கடலோர காவல் நிலையத்தை மாபெரும் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி 24.04.2017 திங்கள் கிழமை காலை சரியாக 11 மணிக்கு மண்டபம் கடலோர காவல் நிலையம் முன்பு மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அதில் மாநில செயலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். கண்டன உரைக்கு பிறகு காவல்துறையினர் முற்றுகை போராட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொண்ட ஆண்கள், பெண்கள் அனைவரையும் இரண்டு மஹாலில் கைது செய்து வைத்தனர்.
அங்கே தொழுகையின் நேரம் வந்த போது அங்கே தொழுகை நிறைவேற்றினர். மேலும் அங்கே வந்த அனைத்து தரப்பு மக்களுக்கும் இஸ்லாத்தின் கொள்கை பற்றி விளக்கி மாநில செயலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களும், சகோ. இம்ரான்கான் அவர்களும் உரையாற்றினார்கள். பிறகு 6 மணிக்கு அனைவரையும் விடுவிக்கப்பட்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment